ராஜராஜேஸ்வரி பாலசுப்ரமணியன்

நம்பிக்கை

நம்பிக்கை.... காலையில் கண் விழிக்கின்றோம்... இரு கை கூப்பி இறைவனை வணங்குகின்றோம்.. இன்றைய பொழுது நல்ல பொழுதாகும் என்ற நம்பிக்கை... நம் கடமைகளுக்காக வெளியே செல்கின்றோம்.. பத்திரமாக திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை.. வேலைக்குச் செல்கின்றோம்.. போகுமிடத்தில் நற்பெயர் பெறுவோம் என்ற நம்பிக்கை.. உணவு உட்கொள்கின்றோம்.. நம் வயிறு அதை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை.. அழகான ஆடைகள் அணிகின்றோம்.. அனைவரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை.. ஓயாமல் பேசுகின்றோம்.. ஒரு சிலராவது கேட்பார்கள் என்ற நம்பிக்கை... இரவில் உறங்க செல்கின்றோம்... அமைதியாக உறங்குவோம் என்ற நம்பிக்கை.. உறக்கத்தில் நல்ல கனவுகள் காண்கின்றோம்.. அந்த கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கை.. மொத்தத்தில் நம்பிக்கை தான் வாழ்க்கை.. எனவே தன்னம்பிக்கையை ஒரு போதும் கை விடாதீர்கள்.. வாழ்க்கை வாழ்வதற்கே...